கொரோனாவால் 100 சதவீதம் திரைப்பட தொழில் பாதிப்பு - ஆர்.கே.செல்வமணி


கொரோனாவால் 100 சதவீதம் திரைப்பட தொழில் பாதிப்பு - ஆர்.கே.செல்வமணி
x
தினத்தந்தி 1 Jun 2020 5:55 PM IST (Updated: 1 Jun 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் 100 சதவீதம் திரைப்பட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இது திரைப்பட தொழிலுக்கு மிகவும் சோதனையான காலம். கொரோனா பொதுமுடக்கத்தால் திரைத்துறைக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இல்லை.

அனுமதி பெறுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளோம்.  18 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும். கொரோனாவால் 100 சதவீதம் திரைப்பட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story