கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதால் இனி குறையத் தொடங்கும் - மருத்துவ நிபுணர் குழு


கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதால் இனி குறையத் தொடங்கும் - மருத்துவ நிபுணர் குழு
x
தினத்தந்தி 15 Jun 2020 2:04 PM IST (Updated: 15 Jun 2020 2:04 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும் என முதல்-அமைச்சர் உடனான ஆலோசக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழு கூறி உள்ளது.

சென்னை

முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழுவினர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும்.கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம்; அதுபோல் நடக்க உள்ளது.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரை

அதிகமாக பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது.ஆனால் உயிரிழப்பை குறைக்க அதிக பரிசோதனை அவசியம்

சென்னையில் 4, 5, 6வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம்.


தமிழகத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகளில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ளது

நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் சிறுநீரக கோளாறு உடையவர்களும் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்.

கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக் கூடாது. காய்ச்சல், தொண்டை வலி வந்து ஒரே நாளில் சரியானாலும் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது

 

காய்ச்சல், தொண்டை வலி வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளோம் என கூறினர்.


Next Story