சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாக பெண் மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார்


சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாக பெண் மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார்
x
தினத்தந்தி 8 July 2020 3:17 AM IST (Updated: 8 July 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

நடிகை வனிதா விஜயகுமார் பூந்தமல்லி அருகே உள்ள போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பூந்தமல்லி,

நடிகை வனிதா விஜயகுமார் பூந்தமல்லி அருகே உள்ள போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு தனது வக்கீலுடன் போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சமூக வலைத்தளத்தில் சூர்யாதேவி என்ற பெண் ஒருவர் தன்னை குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் தனக்கு தெரியாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி பீட்டர் பால் மீது வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தனது 3-வது திருமணம் குறித்து பெண்மணி ஒருவர் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசியதாக வனிதா விஜயகுமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story