முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
Related Tags :
Next Story