மாநில செய்திகள்

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு + "||" + Case against electricity tariff Chennai iCourt order dismissing

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை:

ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்தார்.  ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது

புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலோ, தவறோ இல்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். 

தனிப்பட்ட நபர்களுக்கு குறைகள் இருப்பின் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. போலி இ-பாசை தடுக்க நடவடிக்கை-அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா ஊரடங்கினால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியமாக உள்ளது.
2. ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது
3. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; நாராயணசாமியிடம், வியாபாரிகள் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. டாஸ்மாக் இணையாக வேறு துறைகள் மூலம் வருவாய் ஈட்ட 5 ஆண்டுகளாகும் தமிழக அரசு வாதம்
டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
5. ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.