சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகள் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா? தொடர் ஆராய்ச்சி நடப்பதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சித்தா, யுனானி ஆயுர்வேத மருந்துகளின் மூலம் கொரோனா வைரசை தடுக்க முடியுமா? என்பது குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் தணிகாசலம். இவர், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டிபிடித்ததாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தணிகாசலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர், “கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாக கூறினால், அதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல், சந்தேகக் கண்ணுடன் ஏன் பார்க்கவேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த 10 ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவத் துறைகளுக்கு ரூ.239 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு கபசுர குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி கசாயம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
சித்தா, யுனானி ஆயுர்வேத மருந்துகளின் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா? என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய மருத்துவ முறைகளில் கொரோனா வைரசுக்கு மருந்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் தலைமையில் ஒரு குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின்படி, தற்போது ‘ஆரோக்யம்‘ என்ற பெயரில் ஆயுர்வேதா, சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கி கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
6 சித்த மருத்துவர்கள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளனர். அவற்றை பரீசிலித்த போது, அந்த மருந்தில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? அவற்றை எப்படி தயாரிக்க வேண்டும்? அவற்றின் தரம் என்ன? உள்ளிட்ட விவரங்கள் அதில் இல்லை.
மேலும் இதுபோல ஆய்வு அறிக்கைகளை தரும் டாக்டர் களின் மருந்து குறித்த விவரங்களை குழு ஆய்வு செய்கின்றன. பட்ஜெட்டில் ஆண்டுதோறும் தமிழக அரசு இந்திய மருத்துவத்துறைக்காக ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது.
தற்போது சென்னையில் இரு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரேத்யேகமாக சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுக்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், ‘தணிகாசலம் சித்த மருத்துவர் இல்லை. அவர் போலி டாக்டர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 1998-ம் ஆண்டு சித்தா டாக்டராக தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது போல
போலி சான்றிதழை தயாரித்து வைத்துள்ளார். இவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், அதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி மக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறார்” என்று கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.பாலு, “மனுதாரர் கடந்த பிப்ரவரி மாதமே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “தணிகாசலம் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கொரோனா மருந்து குறித்து அனுப்பிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து ஆயுஷ் அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story