சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி

சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை
பரங்கிமலை ஒன்றிய தேமுதிக துணை செயலாளரான ராஜசேகருக்கும், அருளுக்கும் கார் விடுவதில் ஜனவரி மாதம் தகராறு நேரிட்டதாகவும், இதில் தாக்கப்பட்ட அருள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது அருள் உள்ளிட்ட 7 பேர் நேற்றிரவு தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் திமுக பிரமுகர் மனோநிதி இருப்பதாக கூறி, அவர் வீடு மீது ராஜசேகரின் ஆதரவாளர்கள் 2 பேர் காரில் வந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜேசகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அருள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ், மனோநிதி வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் ராஜேஷ், ஓட்டேரியை சேர்ந்த ரவுடி கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story