பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முடிவு அறிவிப்பு

பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை,
அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி, அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 8-ந் தேதி (இன்று) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இந்த இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story