இந்திய அளவில் முதல் முறையாக தொலைக்காட்சி வழி இலவச ஐஏஎஸ் போட்டித் தேர்வுப் பயிற்சி வகுப்புகள்: மனிதநேயம் ஐஏஎஸ் இலவசப்பயிற்சி மையம் துவக்குகிறது!

இந்திய அளவில் முதல் முறையாக தொலைக்காட்சி வழி இலவச ஐஏஎஸ் போட்டித் தேர்வுப் பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் இலவசப்பயிற்சி மையம் துவக்குகிறது.
சென்னை,
இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு தேர்வாக வேண்டும் என்று விரும்புகிற மாணவர்களுக்கு பெருகி வரும் போட்டிகள் இந்நாளில் பெரும் தடையாக உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவியரும் சாதிகளைக் கடந்து மதப் பாகுபாடுகளைக் கடந்து மத்திய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், உயரிய சேவை நோக்கோடு பல்வேறு தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் ஐஏஸ் இலவசப்பயிற்சி மையம் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இங்கு பயிற்சி பெற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இடம்பெற்றள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இப்பியிற்சி மையத்தில் முதலாண்டில் 100 மாணவ-மாணவியர்களுக்கு இலவசப்பயிற்சி என்கிற அளவில் தொடங்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் தற்போது 18,000 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சியளிக்கப்பட்டு
வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொருளாதார நிலையில் பின் தங்கிய தகுதியுள்ள மாணவர்கள் பெரும்பான்மையாக இந்தப் பயிற்சியின் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
இலவசப் பயிற்சிக்கென வரும் மாணவர்களில் அதிகபட்சமாக 300 மாணவ - மாணவியருக்கு மட்டுமே சிறப்புத் தகுதி மற்றும் பொருளதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இலவச தங்குமிடம் உணவு முதலியவற்றை
ஏற்பாடு செய்து தர முடிகிறது.
இத்தகு சூழலில், இலவச தங்குமிடம் உணவு வசதிகள் மையத்தில் கிடைக்காத பிற மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் இந்த இலவசப் பயிற்சிக்காக சென்னை வந்து, வெளியிடங்களில் தங்கி பயிற்சி பெறும் நிலையில், அவர்கள் முதல் முயற்சியில் வெற்றி பெறுவது அனைவருக்கும் சாத்தியமற்ற ஒன்றாகிறது.
அவர்கள் தொடர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகள் வெளியிடங்களில் தங்கி மையத்தில் பயிற்சி பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு வெளியிடங்களில் தங்கி மனிதநேய மையத்தில் பயிற்சி எடுத்துக்
கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்குமிடம் உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டிற்கு 90 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை செலவாவதாக மாணவர்களும் பெற்றோர்களும் என்னிடம் தொலைபேசி
மூலமாகவும் நேரடியாகவும் முறையிட்டனர்.
இதற்கு மாற்றாக ஏதேனும் வழிமுறைகளை ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய வறுமையிலுள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கனவு
சாத்தியமில்லாமல் போவதாகவும் கருத்துக்களை முன் வைத்தனர்.
அதனடிப்படையில், அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பெற்றோருக்கும் சுமையற்ற வகையில் அவர்களது சிரமங்களைக் குறைத்து, அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக புதிய வகையில் பயிற்சி
முறையை மாற்றியமைக்க எனது மையம் முடிவு செய்துள்ளது.
பெற்றோர்களுக்கு ஒரு ரூபாய் செலவும் இல்லாமல், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் முன்னிலையில் தொலைக்காட்சி வாயிலாகவே முழுமையான அடிப்படைப் பயிற்சி வகுப்புகளை கவனித்து கற்று தெளிந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் மட்டுமே சென்னையில் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் நேரடி ஐஏஎஸ் இலவசப்பயிற்சி வகுப்பிற்கு நேர்முகத் தேர்வு மூலம் அனுமதிக்கப்படுவர். எனவே, தொலைக்காட்சி வழி பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து கவனித்து வர, மாணவ மாணவியர் தங்கள் விவரங்களை மனிதநேய இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சலைத் தராத வகையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த நான்காண்டுகளாக மைய இயக்குநர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்களுடன்
ஆலோசித்து அதனடிப்படையில் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மாணவமாணவியரும் பயன்பெறும் விதமாக, இந்திய அளவில் முதல்முறையாக தொலைக்காட்சி வழியாக ஐஏஏஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் இணையதள வகுப்புகள் என்றாலும் அந்த வசதி அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இணையதள வசதியற்ற, பெற வழியற்ற மாணவர்கள், குடும்பச்
சூழலைக் கருத்தில் கொண்டு இணையதள வகுப்புகளாக இல்லாமல் அனைவரும் காணக்கூடிய தொலைக்காட்சி வாயிலாக தினமும் ஒரு மணி நேரம் மத்திய அரசுப் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளோம்.
இந்த நேரடி வகுப்புகள், பல்வேறு பாடங்களில் சிறந்த புலமை பெற்ற பேராசிரியர்கள், ஐஏஏஸ் தேர்வுகளில் புலமை பெற்றவர்கள் மூலமாக நடத்தப்படும். ஐஏஎஸ் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவ-மாணவியர், பணியியில் இருப்போர், பள்ளி மாணவர்கள், சுயதொழில் செய்வோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் தொடர்களையும் பார்ப்பது போல் தங்கள்
வாழ்க்கையை, எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்புகளை ஏதேனும் ஒரு நாள் தவறவிடும் மாணவர்கள் அதற்கான தொடர்புக் குறியீட்டின் (லிங்க்) மூலம், தவற விட்ட வகுப்புகளை பார்த்து பயன்பெறலாம்.
தேவைப்படும் மாணவர்கள், தவற விட்ட வகுப்புகளை தேவைப்படும் நேரத்தில் அதற்கான லிங்க் மூலமாக திரும்பத் திரும்பக் கேட்டும் பார்த்தும் தங்கள் பாடப்புலமையை பெருக்கி, திறமையை பன்மடங்கு உயர்த்திக்
கொள்ளலாம்.
பாடங்களைத் திரும்பத் திரும்ப பார்ப்பதும் கேட்பதும் அவர்களை போட்டித்தேர்வுகளில் தெளிவான விடைகளை எழுதக்கூடிய திறன் படைத்தவர்களாக மாற்றும்.
பயிற்சி வகுப்புகளில் தினமும் கலந்து கொள்ளும் மாணவர்கள் அடையாளம் காணப்படுவர். தகுதி, திறமை மற்றும் அவர்களின் ஆர்வம் மற்றும் தொடர் வகுப்புகளில் கலந்து கொள்ளும் தன்மை ஆகியவையும் ஓராண்டுக்குப் பிறகு
சென்னையில் நடத்தப்படும் நேரடிப் பயிற்சிக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும்.
நேர்முகத் தேர்வு மூலம் சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு தேர்வாகும் தகுதியும் திறமையும் உள்ள மாணவ-மாணவியருக்கு இலவச உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் தேர்வுகளுக்கு உரிய வகையில்
திறன்மேம்பாட்டுடன் கூடிய இறுதிப் பயிற்சியும் அளிக்கப்படும்.
மத்திய அரசுப் பணிகளுக்கு (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வாக விரும்பும் சாமானிய மாணவ மாணவியருக்கு பொருளாதாரம் எந்த விதத்திலும் ஒரு பெருந்தடையாக இருந்து விடக்கூடாது என்பதே இப்பயிற்சி முறையின்
நோக்கமும் எனது நோக்கமுமாகும்.
இது மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏதேனும் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் ஒளிபரப்பாகும். இது குறித்த அறிவிப்பு விரைவில் விவரங்களுடன் வெளியிடப்படும்.
தமிழகத்திலுள்ள இலட்சக்கணக்கான மாணவர்களின் நலன் கருதி இத்தகு பயிற்சி முறையை கடந்த நான்காண்டுகளாக வடிமைத்து மனிதநேயப் பயிற்சி மையத்தின் மூலமாக இந்திய அளவில் முதல்முறையாக நடைமுறைபடுத்த உள்ளோம்.
விருப்பமுள்ள அனைவரும் இப்பயிற்சி வகுப்புகளில் வீட்டில் இருந்தபடியே எந்தவித செலவுமின்றி பயிற்சி பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் தங்களைப்பற்றி முழுவிவரங்களை எங்களது இணையதள முகவரியில்
முதல் பதிவு செய்து கொண்டு அதற்கான அடையாள எண்களைப் பெற வேண்டும்.
இது அவர்களுக்கான அடுத்தக்கட்ட பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும். முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வுகளை எளிதில் வெற்றி கொள்ளும் வகையில் இப்பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கால நேரத்தை மிச்சப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தலாம். தேவையற்ற வகையில் சென்னையில் வந்து பயில வேண்டும் என்கிற கட்டாயம் இதன் மூலம் தவிர்க்கப்படும். பேரிடர் காலத்திலும் அல்லது வேறு விதமான இடையூறுகள் காரணமாக, பயிற்சி மற்றும் கல்வியில் தடைகள்
ஏற்படாத வண்ணம் இக்காலத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Tags :
Next Story