அமைச்சர் வீரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் வீரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sept 2020 5:27 AM IST (Updated: 20 Sept 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.சி.வீரமணி மூலமாக தொழிலதிபர் பல கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

சென்னை,

வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வேலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். இந்த நிலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி மூலமாக தொழிலதிபர் பல கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. நிலத்தின் குத்தகைதாரர்களான எங்களை இடத்தை காலி செய்து கொடுக்க எங்களுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட தொகையை தொழிலதிபர் வழங்கவில்லை. இதையடுத்து எங்களை போலீசார் மூலம் சட்டவிரோதமாக நிலத்தில் இருந்து வெளியேற்ற அமைச்சர் முயற்சிக்கிறார். எனவே, அமைச்சருக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டசபை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், “நிலம் தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் வீரமணி தனிப்பட்ட முறையில் தலையிட்டுள்ளார்.

அதனால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் முன்அனுமதி தேவையில்லை. அதனால் அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Next Story