உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2020 12:08 PM IST (Updated: 18 Oct 2020 12:08 PM IST)
t-max-icont-min-icon

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் இல்ல திருமணத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார் அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க நம்மை தயார்படுத்த வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. 

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்.  6 மாதத்திற்கு பிறகு காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப்பார்க்கவோ முடியாது.  ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை தி.மு.க.,விற்கு தர தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story