மாநில செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + Increase in the water level of the Thenpennai river - flood warning for coastal people

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு நேற்று வினாடிக்கு 880 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வத்து மேலும் 160 கன அடி அதிகரித்து தற்போது வினாடிக்கு 1,040 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 39.96 அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அதே அளவான 1,040 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.