தீபாவளி பண்டிகை: புத்தாடைகள் வாங்க தி.நகரில் குவியும் மக்கள் - ரங்கநாதன் தெருவில் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்


தீபாவளி பண்டிகை: புத்தாடைகள் வாங்க தி.நகரில் குவியும் மக்கள் - ரங்கநாதன் தெருவில் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 8 Nov 2020 4:27 PM IST (Updated: 8 Nov 2020 4:27 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

தி.நகர் ரங்கநாதன் தெருவில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 300 சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டு, டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் அபராதம்  வசூலிக்கபடும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வணிகப் பகுதிகளுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story