மதுரையில் வரும் 20ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை
மதுரையில் வரும் 20-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை,
மதுரையில் வரும் நவம்பர் 20- ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனிக்கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னை வருகை தரும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க மு.க. அழகிரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story