ஐ.ஐ.டி. ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீக்க பரிந்துரைப்பதா? - துரைமுருகன் கண்டனம்

ஐ.ஐ.டி. ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீக்க பரிந்துரைக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உதவி பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்கவேண்டும் என்றும், ஐ.ஐ.டி. நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்கவேண்டும் என்றும் மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐ.ஐ.டி. ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீக்கவேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு பொருந்தும் என்று உடனடியாக ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story