மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 23-ந் தேதி கோவை வருகை + "||" + Former Congress President Rahul Gandhi arrives in Coimbatore on the 23rd

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 23-ந் தேதி கோவை வருகை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 23-ந் தேதி கோவை வருகை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 23-ந் தேதி கோவை வருகிறார். அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
கோவை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

இதற்காக ராகுல் காந்தியிடம் அனுமதியும் பெற்றனர். அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 23-ந் தேதி முதல் 3 நாட்கள் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து வருகிற 23-ந்தேதி காலை ராகுல் காந்தி கோவைக்கு வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதை ஏற்றுக்கொள்ளும் ராகுல் காந்தி, கோவை சிட்ரா பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இ்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

பின்னர் அவர், கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள் நெசவாளர்களை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்தித்து பேசுகிறார்.

அப்போது தற்போதைய தொழில்துறையின் நிலை, அதை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுகிறார். அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

கோவை பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பூருக்கு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தொழில் அதிபர்கள், தொழிலாளர்களையும் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு அவர், தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை
‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
3. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
4. மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் ஜி -23 காங்கிரஸ் தலைவர்கள்; பிரதமரை பாராட்டிய குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் தலைமைக்கு மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் ஜி -23 காங்கிரஸ் தலைவர்கள். கடந்த வார இறுதியில் ஜம்முவில் ஒரு கூட்டம் நடத்தினர்
5. கன்னியாகுமரி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம்
கன்னியாகுமரி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.