தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்ந்தது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து உள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி,
கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தது.
இதுதவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து உள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். எனவே, தீப்பெட்டி விலையை ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்துவது எனவும், அந்த விலை உயர்வு டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி, நேற்று முதல் தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது.
Related Tags :
Next Story