நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-ம் கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதி நாளையோடு நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த 9-ம் கட்ட பட்டியலில் மதுரை, தென்காசி, திருவாரூர், கோவை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story