மரம் ஏறுபவரின் வடிவில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மரமேறும் தொழிலாளி வடிவில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்க்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுவதால் இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டு வந்த கூட்டுறவு பதநீர் சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது.
இச்சூழ்நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.முத்து, மரமேறும் தொழிலாளியாகவே சென்று வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story