காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை...!


காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை...!
x
தினத்தந்தி 10 Feb 2022 8:14 AM IST (Updated: 10 Feb 2022 8:14 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விஷ்ணு காஞ்சி போலீசார் ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைத்து அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Next Story