திமுகவில் இருந்து 45 பேர் நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக நிர்வாகிகள் 45 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
இந்த சூழலில் திமுக, அதிமுக கட்சியிலிருந்து தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 45 திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுவரை 140க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story