தமிழகம் முழுவதும் தாமரை மலருவது உறுதி- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி


தமிழகம் முழுவதும் தாமரை மலருவது உறுதி- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2022 2:19 PM IST (Updated: 18 Feb 2022 2:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் தாமரை மலருவது உறுதி என்று பா.ஜ.க தலைவர்அண்ணாமலை கூறினார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி நடந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 97 ஆயிரத்து 882 போலீசார், 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர முன்னாள் ராணுவத்தினரும் இந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 73 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் கள நிலவரம் பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க மீது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது எந்தவிதமான புகாரும் கிடையாது. அவர்கள் மக்களை கவர்ந்துள்ளார்கள். சென்னை மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும்.

ஆளுங்கட்சியினரின் ஆராஜகங்கள் அனைத்து பகுதியிலும் நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாரா முகமாகவே இருக்கிறது. எதிர்பார்த்த அளவு அவர்கள் வேலை செய்ய வில்லை. தேர்தலை முறையாக நடத்துவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story