தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 8:05 PM IST (Updated: 19 Feb 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,051- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே குறைந்து வருகிறது. நேற்று தினசரி பாதிப்பு 1,146- ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் குறைந்து 1,051- ஆக பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 43 ஆயிரத்து 980- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,561- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று  82 ஆயிரத்து 053- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 238- பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story