தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்..!


தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்..!
x
தினத்தந்தி 19 Feb 2022 8:06 PM IST (Updated: 19 Feb 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து ஊரைச் சேர்ந்தவர் லிங்கம் மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் பொன்னரசி, பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் படித்து வந்தார். 

சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்திருந்த பொன்னரசி உணவு இடைவேளையின் போது, பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதில் பொன்னரசி பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த மாணவிகள் கூச்சலிடவே ஆசிரியர்கள் அனைவரும் ஓடிவந்து, காயமடைந்த அந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அந்த மாணவி மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து  பாவூர்சத்திரம் போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி பொன்னரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story