சென்னை: சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முன்னிலை

சென்னை 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முன்னிலை வகித்து வருகிறார்.
சென்னை,
தமிழகத்தில் 21 மாநகராட்சி கள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இந்நிலையில், சென்னை 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளரை விட 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story