“உடற்பயிற்சிக் கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்” - காவல் ஆணையர் ரவி

மருத்துவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை காவல் ஆணையர் ரவி துவக்கி வைத்தார்.
சென்னை,
பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி தனது மகளுடன் கலந்து கொண்டார். இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியை காவல் ஆணையர் ரவி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே இல்லாத சூழல் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் மருத்துவமனைகளில் பெண் நோயாளிகளுக்கு ஆண் மருத்துவர் பரிசோதனை செய்யும் போது அவருடன் ஒரு பெண் செவிலியர் அல்லது நோயாளியின் உறவினர் உடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே போல் உடற்பயிற்சிக் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story