புதுச்சேரியில் பரவலாக மழை

புதுச்சேரியில் பெய்த மழையாலும், அடித்த காற்றாலும் பலமணிநேரம் மின் வினியோகம் தடை பட்டது.
வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புதுச்சேரியில் நேற்று காலை முதல் மாலை வரை சூரியன் தலைக்காட்டாமல் மிதமான வானிலை நிலவியது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை கொட்டியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
மழை காரணமாக புதுச்சேரி கடற்கரையில் மாலைக்கு மேல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஒருசில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தப்படி கடலின் அழகை ரசித்தனர்.
பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், கரையாம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்வினியோம் தடைபட்டது. இரவு 9 மணி வரை மின்சாரம் வராததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story