திருக்கனூர் அருகே டிரைவர் வழிமறித்து தாக்கப்பட்டார்

திருக்கனூர் அருகே பொக்லைன் எந்திர டிரைவ¬ó வழிமறித்து Aòõ˜è¬÷ போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே பொறையூர் காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 24), பொக்லைன் எந்திர டிரைவர். இவர் நேற்று மாலை திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். அப்போது அவர் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அவரை சோரப்பட்டை சேர்ந்த வீராசாமி மகன் டேனியல் உள்பட 3 பேர் வழிமறித்து தகராறு செய்தனர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த டேனியல், தான் அணிந்திருந்த வளையத்தால் அபிஷேக் முகத்தில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த அபிஷேக், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story