12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது


12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி  இன்று முதல் செலுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 16 March 2022 12:07 AM IST (Updated: 16 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.

புதுச்சேரி
புதுவையில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.

தடுப்பூசி

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது
.
12 வயதுடையவர்கள்

இந்தநிலையில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி  ேகார்பே வேக்ஸ் என்ற தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் இந்திராகாந்தி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதற்காக 56 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் புதுவைக்கு வந்துள்ளன.

Next Story