பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 March 2022 7:56 PM IST (Updated: 17 March 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

தோட்டப்பயிர் சாகுபடி குறித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் திருநள்ளாறை அடுத்த கண்ணாப்பூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தோட்டப் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமுக்கு காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் கதிரவன் கலந்துகொண்டு காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்தும், அதனை பராமரிப்பதும் குறித்தும் விளக்கினார். மேலும் பள்ளி மைதானத்தில் மாணவர்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது.


Next Story