அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு குறித்து அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறித்தியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் வீழ்ச்சி பாதையில் செல்கிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது. அப்படியே வந்தாலும் அதனை விரட்ட, மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story