புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது

புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட்
புதுவையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய அரசு அமைந்தபின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையே தொடர்ந்து வருகிறது.
தற்போதைய சூழ்ந்லையில்புதுவை சட்டசபை இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபை நடவடிக்கைகளை திருக்குறள் வாசித்து சபாநாயகர் செல்வம் தொடங்கி வைக்கிறார்.
சபையில் அரசின் 5 மாத (ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை) செலவினத்துக்கான நிதி ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும் 2021-22ம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கும் ஒப்புதல் பெறப்படுகிறது.
மேகதாது அணை
புதுவையில் சட்டசபையில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயத்தை கைவிடக்கோரியும், நீட் தேர்வுக்கு விலக்குகோரியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இன்றைய கூட்டத்தின்போது அதை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
சமீப காலமாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே வாரிய தலைவர் பதவி தொடர்பாக மோதல்போக்கு இருந்து வருகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்தில் அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதுவும் சட்டசபையில் பிரச்சினை கிளம்புமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பதிலடி தருமா?
பா.ஜ.க.வை குறிவைத்து குற்றஞ்சாட்ட எதிர்க்கட்சிகளான தி.மு.க.- காங்கிரஸ் திட்டமிட்டுள்ளன. அதற்கு பா.ஜ.க.வுடன் இணைந்து பதிலடி தர என்.ஆர்.காங்கிரஸ் உறுதுணையாக இருக்குமா? என்பது இந்த கூட்டத்தின்போது தெரியவரும்.
இதற்கிடையே சட்டசபை கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சபாநாயகர் செல்வம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story