ஜே.சி.பி எந்திரம் மூலம் 1500 மதுபாட்டில்கள் அழிப்பு...!

உளுந்தூர்பேட்டை அருகே பறிமுதல் செய்த 1500 மது பாட்டில்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் போலீசார் அழித்தனர்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைப்பற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 1500 மதுபாட்டில்களை உடனடியாக கொட்டி அழிப்பதற்கு உளுந்தூர்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் உளுந்தூர்பேட்டை சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஏரிக்கரையின் ஒரு இடத்தில் 1500 மது பாட்டில்களையும் தரையில் கொட்டி ஜேசிபி எந்திரம் கொண்டு அழித்தனர்.
அப்போது மது பாட்டில்கள் வெடித்து சிதறி அந்த இடமே மது ஆறாக ஓடியது. அழிக்கப்பட்ட மது பாட்டில்களின் கண்ணாடிகள் அருகே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story