வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து


வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
x
தினத்தந்தி 3 April 2022 10:00 PM IST (Updated: 3 April 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.

பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.
மது குடித்த...
அரியாங்குப்பம் அடுத்துள்ள நோணாங்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றார். 
அப்போது நோணாங்குப்பம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்த ராஜா (30), காமன்கோவில் வீதியை சேர்ந்த வர்மா என்ற மேகவர்மன் (31) ஆகியோர் பாலத்தில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
பீர்பாட்டில் குத்து
பொது இடத்தில் அமர்ந்து மது குடித்ததை விஜயகுமார் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை தாக்கி பீர்பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story