வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி: ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை அதிகரிக்கிறது
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக ஓட்டல்களில் உணவு வகைகளின் விலையும் அதிகரிக்க இருக்கிறது.
சென்னை,
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக கடைகளில் டீ - காபி விலை உயர்ந்தது. டீ விலை ரூ.2-ம், காபி விலை ரூ.3-ம் உயர்ந்திருக்கிறது. இதையடுத்து ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளிலும் இந்த விலையேற்றம் எட்டி பார்க்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது:-
வேறு வழி இல்லை
சென்னையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.268 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரத்து 253-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்த கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எங்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. வர்த்தக கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையலே இல்லை எனும் சூழலில், ஏராளமான செலவை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையில் சொத்துவரியை எக்கச்சக்கமாக உயர்த்தி இருக்கிறார்கள். இது எங்களுக்கு இன்னும் வேதனையையும், சிரமத்தையும் அளித்துள்ளது. எனவே இச்சூழலில் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதை விட எங்களுக்கு வேறு வழி கிடையாது.
சொத்துவரி உயர்வு
இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், அதேவேளை எங்கள் தொழிலும் பாதிக்காதவாறு எந்தெந்த உணவு வகைகளில் எவ்வளவு விலையேற்றம் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.
அதேவேளை சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறோம். இப்போது உயர்த்தப்பட்ட அளவில் 50 சதவீதத்தை, அதாவது பாதியாக இந்த வரி அதிகரிப்பை குறைக்க வேண்டும். இது எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
சிறிய ஓட்டல்களில் உணவுகளின் விலையை ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பெரிய ஓட்டல்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்களிலும் ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும், குறிப்பாக இட்லி ரூ.1 அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே காய்கறி - பழ வகைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஓட்டல்களில் உணவு வகைகளின் விலையும் அதிகரிக்க இருப்பது பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Tags :
Next Story