அச்சக உரிமையாளரை காவலில் விசாரிக்க போலீசார் முடிவு

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் ஊட்டி அச்சக உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் ஊட்டி அச்சக உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் ஊட்டி அச்சக உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ள நோட்டு
புதுவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல் என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் சென்னை கும்பலிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை எண்ணூர் பிரதீப்குமார், ரகு (வயது 30), ராயபுரம் நாகூர் மீரான் (30), தமீன் அன்சாரி (28), பழைய வண்ணாரபேட்டை சரண்ராஜ் (30) ரகு உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் புதுவைக்கு வந்த தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் 4 பேர் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்ணியா உத்தரவிட்டுள்ளார்.
அச்சக உரிமையாளர்
இந்த வழக்கு தொடர்பாக ரகு உள்பட 4 பேரை உருளையன்பேட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஊட்டி எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த அச்சக உரிமையாளர் தாமஸ் (39) என்பவர் கள்ளநோட்டு தயாரிக்க தேவையான உபகரணங்களை வாங்க உதவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் தாமசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுவை கோர்ட்டில் நாளை (புதன் கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரணையை முடித்தபின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story