விராலிமலையில் தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் உருவங்களை வடிவமைத்த இளைஞர்கள்

தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் உருவங்களை வடிவமைத்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ரத்னா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் நேதாஜி (வயது 21). இவர் வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதே பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் குகன் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மற்றவர்கள் வரையும் ஓவியங்களிலிருந்து தாங்கள் வரையும் ஓவியம் தனித்துவம் வாய்ந்ததாகவும், கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என எண்ணி புதிய முயற்சியாக வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றை பறித்து அதில் தேசிய தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் ஆகியோரதுஉருவ வடிவங்களை தத்ரூபமாக வடிவமைத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன், நேதாஜி மற்றும் குகன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story