கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு


கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2022 9:58 PM IST (Updated: 6 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இந்திய கடலோர காவல் படை மையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை கிழக்குப் பிராந்திய காமாண்டர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை மையத்தில், நிரந்தர கட்டிடத்துக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி இங்கு கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆனந்த் பிரகாஷ் படோலா வந்தார். அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். 
இதுகுறித்து காரைக்கால் இந்திய கடலோர காவல்படை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காரைக்கால் மைய கடலோர காவல்படை, ரோந்து கப்பல்களின் செயல்பாடுகள், மீனவர்களை பாதுகாக்கும் வகையிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், காரைக்கால் கடலோர காவல் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை கிழக்குப் பிராந்திய கமாண்டிங் அதிகாரி எடுத்துக் கூறினார். 
மேலும், காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில், இந்திய கடலோர காவல் படை மைய ரோந்து கப்பல்களை நிறுத்துவதற்கான இடவசதி குறித்தும் கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story