புதுவை நெல், கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்


புதுவை நெல், கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்
x
தினத்தந்தி 7 April 2022 10:44 PM IST (Updated: 7 April 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

நெல், கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நெல், கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தி மானியம்
2020-21-ம் ஆண்டு கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் சென்ற ஆண்டு சொர்ணவாரி மற்றும் சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு நவரை மற்றும் சொர்ணவாரி விதை நெல் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்த 824 புதுவை பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 1,819 ஏக்கருக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரமும், 28 புதுச்சேரி அட்டவணை இன விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.11 ஆயிரம் வீதம் 31.57 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 47 ஆயிரமும் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
நெல் சாகுபடி
மேலும் சென்ற ஆண்டு சொர்ணவாரியில் நெல் சாகுபடி செய்த முதல் பிரிவாக 1,427 விவசாயிகளுக்கு (பொதுப்பிரிவு) உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 2 ஆயிரத்து 575 ஏக்கருக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரமும், 205 அட்டவணை இன விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 237 ஏக்கருக்கு ரூ.14 லட்சத்து 26 ஆயிரமும் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
2-வது பிரிவாக மீதமுள்ள பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு விரைவில் உற்பத்தி மானியம் வழங்கப்படும். மேலும் சென்ற ஆண்டு சொர்ணவாரியில் நெல் சாகுபடி செய்த 542 அட்டவணை இன விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 614 ஏக்கருக்கு ரூ.36 லட்சத்து 13 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 
2020-21 நவரை மற்றும் 2021-22 சொர்ணவாரி பருவத்தில் விதை நெல் உற்பத்தி செய்ய விவசாயத்துறைக்கு வழங்கிய 8 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 400 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story