பாம்பு கடித்து பூம்பூம்மாடு உயிரிழந்த சோகம்...!


பாம்பு கடித்து பூம்பூம்மாடு உயிரிழந்த சோகம்...!
x
தினத்தந்தி 11 April 2022 9:45 AM IST (Updated: 11 April 2022 9:47 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து பூம்பூம்மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூர் அடுத்த வன்னி பாக்கம் ஏரிக்கரையில் 25-க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பமாக இருந்து வருகின்றனர். இதில் கோவிந்தம்மாள் என்பவர் பூம்பூம் மாடு வளர்த்து ஊர் ஊராக சென்று வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற அவரது பூம்பூம் மாடு பாம்பு கடித்து இறந்து உள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம்  மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள்  மாட்டை சுற்றி உட்கார்ந்து அழுது மாடு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சடங்குகள் செய்து சாமி  கும்பிட்டு  அடக்கம் செய்தனர்.

வீடு வீடாக வந்து  பாசத்துடன் தலையசைத்து கூப்பிட உடன் வரும் மாடு இறந்தது வன்னிபாக்கம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story