திருச்சி: கரடிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி- 600 காளைகள் பங்கேற்பு...!


திருச்சி: கரடிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி- 600 காளைகள் பங்கேற்பு...!
x
தினத்தந்தி 18 April 2022 8:30 AM GMT (Updated: 2022-04-18T13:53:10+05:30)

திருச்சி அருகே கரடிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் பங்கேற்றனர்.

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள கரடிபட்டியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டிகள் 600-க்கும் மேற்பட்ட காளைகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. 

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையிலும் களத்தில் பல காளைகள் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டி அடித்தது. இதேபோல் விரட்டிய காளைகளை முரட்டு பிடி பிடித்து காளையர்கள் வெற்றி கண்டனர். 

இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில் பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 

காளைகளை அடக்க முற்படும் போது காயமடைந்தவர்களுக்கு அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  


Next Story