விவசாய முறையில் புதிய யுக்திகளை கையாள வேண்டும்


விவசாய முறையில் புதிய யுக்திகளை கையாள வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2022 9:36 PM IST (Updated: 27 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாய முறையில் புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா யோசனை தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாய முறையில் புதிய   யுக்திகளை கையாள    வேண்டும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா யோசனை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் திருவிழா
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையம்   மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இணைந்து விவசாயிகள் திருவிழா, விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் கண்காட்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரும்பாலான  மக்கள் இயற்கை   விவசாயம், இயற்கை உணவுக்கு  மாறி வருகின்றனர். இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாய முறைகளில் புதிய யுக்திகளை        கையாள வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
உணவு உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசின் வேளாண் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும். குறிப்பாக வேளாண் அறிவியல் நிலையமானது தங்களது பங்களிப்பை விவசாயிகள் மென்மேலும் சிறப்படைய செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், கால்நடை மருத்துவர் கோபிநாத், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி உழவியல்துறை பேராசிரியர்       மோகன், பேராசிரியர்   நாராயணன், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் கதிரவன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
கண்காட்சியில் நெல், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், மகளிர்  சுய உதவிக் குழுக்களின் உணவு பொருட்கள், இயற்கை விவசாயி பாஸ்கரின் 300-க்கும் மேற்பட்ட இயற்கை பாரம்பரிய நெற்பயிர்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும்     காரைக்கால் வேளாண்துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், டிரோன் மூலமாக விவசாய நிலங்கள் மீது, மருந்து தெளிப்பது குறித்து  செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக,     வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர்   அனைவரையும் வரவேற்றார்.

Next Story