இலங்கைக்கு உதவ சட்டப்பேரவையில் தமிழக அரசு இன்று தீர்மானம்..!
இலங்கைக்கு உதவ சட்டப்பேரவையில் தமிழக அரசு இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் கேள்வி நேரம். அதைத் தொடர்ந்து 2 முக்கியமான கவன ஈர்ப்புகள் முன்வைக்கப்பட இருக்கின்றன. அதைத் தொடரந்து தமிழக அரசு தனி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்கிறது. இந்த தனி தீர்மானத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிகிறார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமன அடிப்படையில் உதவிடும் வகையில் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்புவதற்கு தயாராக உள்ளது.
அவற்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு ஏற்கெனவே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் இலங்கை மக்களின் கடும் இன்னல்களை போக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி இந்த தனி தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
Related Tags :
Next Story