சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92.14% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது


சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92.14% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 2 May 2022 9:35 AM GMT (Updated: 2 May 2022 9:35 AM GMT)

சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2022 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2022 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் திரு.அருள் செல்வன், திருமதி. மரிய பெர்னதெத் தமிழரசி, விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் திரு. ரமேஷ் தனக்கோட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 92.14% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 2004 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள. 

2022-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 363-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பெருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.

இந்த  363 நிறுவனங்களில் புதிய உச்சமாக 401 மாணவர்கள் 4.75 இலட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.

வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:

1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு 31.00 இலட்சம்
2. சராசரி ஆண்டு ஊதியம் 4.75 இலட்சம்.
3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
4. தொழில் நிறுவன உறவுகளில் சத்யபாமாவின் கூட்டு அணுகுமுறை மூலம் HCL and Capgemini நிறுவனங்கள் 300 மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது. 
வளாகத்தேர்வில் பங்குபெற்ற சில நிறுவனங்கள்: 

Cisco, Cognizant, Wipro, Capgemini, HCL, Oracle, Verizon, Bank of America, ICICI, IBM, Schneider Electric, Nokia, Hyundai, Renault Nissan, LnT, Deloitte, Silicon Labs, EY, FIS Global and Zifo RnD, மற்றும் பல.

எதிர்காலங்களில் வளாகத்தேர்வுகளில் நிறைய நிறுவனங்கள் பங்குபெற்று இன்னும் நிறைய மாணவர்களை பணியமர்த்த இருக்கிறாரகள்.பெருநிறுவனங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் சத்யபாமா மாணவர்கள் தயாராக இருந்தனர்.

இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இப்பெரும் சாதனை மூன்றாமாண்டு மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் சத்யபாமா மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பில் சிறந்து விளங்குவார்கள்.


Next Story