எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு; 42 ஆயிரம் பேர் ஆப்சென்ட்- பள்ளிக் கல்வித்துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வை 42,024 மாணவர்கள் எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்படாமல், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டு இடைவெளிக்கு பின் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story