`அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது’ என கூறிய மன்னார்குடி ஜீயர் மீது போலீசில் புகார்...!

அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என கூறிய மன்னார்குடி ஜீயர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் திராவிடர் கழக நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு அளித்து உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
மயிலாடுதுறையில் தருமபுரம் என்னும் சைவ மடத்தின் ஆதீன கர்த்தரை மனிதர்கள் சுமந்து செல்லும் பட்டறை பிரவேசம் என்னும் நிகழ்ச்சியை தடை விதித்ததை கண்டித்து மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் பல்லாக்கு தூக்குவதை தடுத்தால் தமிழக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சாலையில் நடமாட முடியாது என அவமரியாதையாக பேசியதை கண்டித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story