ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேராசிரியர்
புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 73). தாகூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று ரூ.2 லட்சம் எடுத்தார். அதை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.
பணம் திருட்டு
ஸ்கூட்டரில் செல்லும்போது, அவ்வப்போது போன் வரவே வாகனத்தை நிறுத்தி பேசி உள்ளார். மேலும் ரோட்டோரம் இருந்த இளநீர் கடையில் ஸ்கூட்டரை நிறுத்தி இளநீரும் குடித்துவிட்டு சென்றார்.
அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஸ்கூட்டரின் பெட்டியில் இருந்த பணத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அவரை பின் தொடர்ந்து வந்து அவரது கவனம் திசை திரும்பிய வேளையில் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக ராமநாதன், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் ராமநாதன் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story