காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய மாணவர்கள் 176 பேருக்கு பணி

காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய மாணவர்கள் 176 பேர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய பணியாணை பெற்றுள்ளனர்.
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய மாணவர்கள் 176 பேர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய பணியாணை பெற்றுள்ளனர்.
176 பேருக்கு பணி
புதுவை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் பல மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதன்படி தற்போது புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 176 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. அவர்களை நிறுவன இயக்குனர் செல்வராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பொறுப் பாளர்கள் தீனதயாளன், வேல்.கார்த்திகேயன், ராஜாபாதர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
தற்போது கல்லூரி பேராசிரியர் தகுதி தேர்வுக்கும், அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கவர்னர், முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு நிறுவன இயக்குனர் செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story