ஆட்டையாம்பட்டியில் 220 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது


ஆட்டையாம்பட்டியில் 220 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
x

ஆட்டையாம்பட்டியில் 220 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் தனிப்படை போலீசார் ஆட்டையாம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் சாலூர் பகுதியை சேர்ந்த சைத்தன் சிங் (வயது 23) மற்றும் பாலூர் பகுதியை சேர்ந்த ஜலம் சிங் (39) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story