23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

வாலாஜா அருகே 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அம்மணந்தாங்கல் பகுதியில் விபத்தில் சிக்கிய கார் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காரில் சோதனை செய்தனர். அப்போது 23 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.

இதனையடுத்து போலீசாா் புகையிலை பொருட்களுடன் காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story